தர்மபுரி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை திடீர் சாவு- போலீசார் விசாரணை


தர்மபுரி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை திடீர் சாவு- போலீசார் விசாரணை
x

தர்மபுரி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தர்மபுரி

தர்மபுரி அருகே உள்ள சவுளுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 28), .கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சினேகா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவிற்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 2-வது பெண் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தையை பெற்றோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை இறந்திருப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை திடீரென உயிரிழந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story