கழிவுகளால் மாசடையும் ஊருணி


கழிவுகளால் மாசடையும் ஊருணி
x
தினத்தந்தி 29 Aug 2023 12:30 AM IST (Updated: 29 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே கழிவுகளால் ஊருணி மாசடைந்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகங்கை

காரைக்குடிகாரைக்குடி அருகே கழிவுகளால் ஊருணி மாசடைந்து வருகிறது

காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவுடை பொய்கை கிராமத்தில் உள்ள ஊருணியில் அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஊருணி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஊருணியில் ரசாயன கழிவுகள் கலப்பதால் தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. இதனால் இந்த நீரில் குளிக்கும்போது உடலில் அரிப்பு மற்றும் பல்வேறு வகையான தோல் நோய்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து அக்கிராமத்தைச் சே்ாந்த தாமஸ் என்பவர் கூறும்போது, ஆவுடைபொய்கை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் இந்த ஊருணியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த ஊருணியில் ரசாயன கழிவுகள் கலந்ததால் சுகாதாரமற்ற நிலையிலும், நீரின் நிறம் மாறியும் காணப்படுகிறது. இந்த ஊருணியில் குளிக்கும் பொதுமக்களுக்கு உடலில் கடுமையான அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுறது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகப்பன் கூறும்போது:-

இந்த ஊருணி குறித்து கிராம மக்கள் புகார் அளித்ததையடுத்து நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று ஆய்வு செய்தேன். மேலும் ஊராட்சி நிதியில் இருந்து உடனடியாக இந்த ஊருணியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி ஊருணியை தூர்வாரி சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story