அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

கொங்கு காளை மாடு

அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, கொங்கணாபுரம், எடப்பாடி, சங்ககிரி, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

எருமை மாடு

சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.45 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

ஈரோடு, சத்தியமங்கலம், பெருந்துறை, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.


Next Story