நடந்து சென்றவர், மோட்டார் சைக்கிள் மோதி சாவு
டி.கல்லுப்பட்டியில் நடந்து சென்றவர், மோட்டார் சைக்கிள் மோதியதால் இறந்தார்.
மதுரை
பேரையூர்,
விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சியை சேர்ந்தவர் கண்ணன் என்ற மலைச்சாமி (வயது 55). இவர் சம்பவத்தன்று டி.கல்லுப்பட்டியில் இருந்து ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து பேரையூர் சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மலைச்சாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.. இது குறித்து கல்லுப்பட்டி போலீசார் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பேரையூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story