அரசு பள்ளியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி


அரசு பள்ளியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி
x

சாயல்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், பிள்ளையார்குளம் கூட்டுறவு சங்க தலைவர் காளிமுத்து, எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வில்வ சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வீரமாளி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை கலைச்செல்வி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். கடலாடி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயம், விஜயலட்சுமி, ருக்மணி தேவி, மேற்பார்வையாளர் சுரேஷ் பாண்டி, ஆசிரியர் பயிற்றுனர் வேளாங்கண்ணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில இணை செயலாளர் கலைமுருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனியசாமி, வட்டார செயலாளர் ஆனந்தராஜ், வட்டார பொருளாளர் லிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடி மாணவிகள் அசத்தினர். இடைநிலை ஆசிரியை ஆரோக்கிய ஜெரோபிஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியை பிரின்ஸிலியா, இடைநிலை ஆசிரியை விமலிட்டா, இடைநிலை ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


Related Tags :
Next Story