விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் சுற்றுச்சுவர்
கோவை லாலி ரோடு சந்திப்பு அருகே விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வகையில் தோட்டக்கலை துறை சுற்றுச்சுவர் உள்ளது. அதை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை
கோவை லாலி ரோடு சந்திப்பு அருகே விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வகையில் தோட்டக்கலை துறை சுற்றுச்சுவர் உள்ளது. அதை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணை இயக்குனர் அலுவலகம்
கோவை ஆர்.எஸ்.புரம் லாலிரோடு சந்திப்பு அருகே தடாகம் ரோட்டில் மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இதன் அருகே அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேளாண் பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங் கள் உள்ளன. இந்த தோட்டக்கலைதுறை அலுவலகத்தை சுற்றி கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு சுமார் 5 அடி உயர சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இதில் மருதமலை ரோட்டின் அருகில் உள்ள தோட்டக்கலை துறை இணை இயக்குனர் அலுவலக சுற்றுச்சுவர் மிகவும் பழுத டைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது.
மேலும் எப்போ தும் கீழே விழும் என்பது தெரியாமல் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நிற்கிறது.
இடிந்து விழுந்தது
அந்த ரோட்டில் எப்பேது வாகன போக்குவரத்து இருக்கும் என்பதால் சுவர் இடிந்து விழுந்தால் உயிர்ப்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதனால் லாலி ரோடு சிக்னல் அருகே சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் சேதம் ஏற்படவில்லை.
இதில் மருதமலை ரோட்டில் ஆபத்தாக நிற்கும் அந்த சுற்றுச் சுவரை இடித்து அகற்றி விட்டு புதிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆபத்து ஏற்பட வாய்ப்பு
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மருதமலை முருகன் கோவில் மற்றும் சட்டக் கல்லூரி, பாரதி யார் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மருதமலை சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் மருதமலை சாலையில் உள்ள தோட்ட கலை துறை இணை இயக்குனர் அலுவலக சுற்றுச்சுவர் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
தற்போது மழை பெய்து வரும் நிலையில், சேதமடைந்த சுற்றுச் சுவர் இடிந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.