மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்


மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்
x

கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தில் பெய்த பலத்த மழையினால் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதையறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், மழை பெய்யும்போது உடனடியாக தண்ணீரை வெளியேற்றவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி, நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் நகரில் மழையின் காரணமாக அடிக்கடி கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, இதற்கு தமிழக அரசின் மூலம் நிரந்தர தீர்வு காணப்படும். தேங்கிய மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, பொறியாளர் அணி இளங்கோ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றினர். மேலும் தண்ணீரை வெளியேற்றிய பின்னர் தொற்றுநோய் பரவாவல் இருக்க பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு அப்பகுதியில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


Next Story