திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
x

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சீட்டுப்பணம்

திருப்பூர் வீரபாண்டி அய்யம்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த ராமர் மற்றும் அவருடைய மனைவி கலா ஆகியோர் சேர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக பொங்கல் சீட்டு, தீபாவளி சீட்டு, சித்திரை சீட்டு என ஏலச்சீட்டு நடத்தி வந்தார்கள். இவர்களிடம் அய்யம்பாளையம், ஜே.ஜே.நகர், வஞ்சிநகர், கிருஷ்ணாநகர், திருக்குமரன் நகர் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.

பணம் செலுத்தியவர்களிடம், சீட்டுத்தொகை புத்தகத்தில் வரவு வைத்து கையெழுத்தும் போட்டு கொடுத்துள்ளனர். இந்தநிலையில் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு தொகை கொடுக்காமல் ராமர் இழுத்தடித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென்று தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.

ரூ.60 லட்சம் மோசடி

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் 200 பேரிடம் ரூ.60 லட்சத்துக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்தது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் மத்திய போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமரை (வயது 53) மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story