ரெயில் நிலையம் என நினைத்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த நபர்


ரெயில் நிலையம் என நினைத்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த நபர்
x

ரெயில் நிலையம் என நினைத்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த நபர்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு என சுற்றுலா வந்த ஒருவர், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தனது மணிபர்ஸ் மற்றும் உடைகள் எடுத்து வந்த பையை தவறவிட்டு, செய்வதறியாமல் திருச்சிக்கு ரெயில் ஏறி அங்கிருந்து திண்டுக்கல் செல்ல திட்டமிட்டு இருந்தார். இதனையடுத்து ரெயில் நிலையத்திற்கு புறப்பட்ட அவர், ரெயில் நிலையம் என நினைத்து செல்லும் வழியில் இருந்த நாகை கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார். தொடர்ந்து அங்கு உள்ள அலுவலர்களிடம், நான் திண்டுக்கல் செல்ல வேண்டும். டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் திருச்சி செல்லும் ரெயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கும் என்றும் தள்ளாடியபடி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், இது ரெயில் நிலையம் இல்லை, நாகை கலெக்டர் அலுவலகம் என்று கூறினர். ஆனால் அந்த போதை ஆசாமியோ, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறியதை கேட்காமல், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து எனக்கு டிக்கெட் கொடுத்தால்தான் நான் இங்கிருந்து செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார். இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். விசரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story