ஒரு நபர் குழு விசாரணையை மாற்ற வேண்டும்-இந்து முன்னணி வலியுறுத்தல்


ஒரு நபர் குழு விசாரணையை மாற்ற வேண்டும்-இந்து முன்னணி வலியுறுத்தல்
x

நாங்குநேரி சம்பவத்தில் ஒரு நபர் குழு விசாரணையை மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி பிளஸ்-2 மாணவன் மற்றும் சகோதரியை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தை சாதி ரீதியான பிரச்சினையாக சிலர் மாற்ற முயற்சிக்கிறார்கள். சில சினிமா டைரக்டர்கள், சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளத்தில் நாங்குநேரி சம்பவம் குறித்து பதிவுகளை செய்து சாதி மோதல் நடந்ததாக குறிப்பிட்டு வருகிறார்கள்.

நாங்குநேரி பகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவனும், பிரச்சினையை ஏற்படுத்திய மாணவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து கபடி விளையாடி உள்ளனர். பள்ளியில் இருந்து சிலர் கவுரவ பிரச்சினை காரணமாக இதை தூண்டி விட்டுள்ளனர். தமிழக அரசு விழிப்புணர்வோடு செயல்பட்டு மாணவர்களிடம் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக நியமித்துள்ள ஒரு நபர் குழு விசாரணையை தமிழக அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story