இடப்பிரச்சினையில் கூலி விவசாயியின் வீட்டை டிராக்டரால் இடித்து தள்ளிய நபர்... தேனியில் பரபரப்பு


இடப்பிரச்சினையில் கூலி விவசாயியின் வீட்டை டிராக்டரால் இடித்து தள்ளிய நபர்... தேனியில் பரபரப்பு
x

தேனியில், இடப்பிரச்சினையில், கூலி விவசாயியின் வீட்டை டிராக்டர் மூலம் தரைமட்டமாக இடித்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி,

தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி ரங்கநாதபுரம் பகுதியில் 12 சென்ட் மானாவாரி விவசாய நிலத்தில் முத்துலட்சுமி என்பவர் தனது இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். 4 பேருக்கு சொந்தமான இடத்தை பாலர் பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தனக்கு சொந்தமான இடம் எனக் கூறி பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிராக்டருடன் வந்த ராஜா, முத்துலட்சுமிக்கு சொந்தமான வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், இடத்தினை மீட்டுத் தரக்ககோரி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story