அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலசண்முகபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 42). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் மது குடித்து விட்டு வீட்டில் படுத்து இருந்தாராம். மறுநாள் காலையில் பார்த்த போது இறந்தநிலையில் கிடந்தார்.

இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story