உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி, கடவூர் தாலுகா பாலவிடுதி போலீஸ் நிலையத்திற்குட்ட இடையப்பட்டி வனப்பகுதி அருகே உள்ள தோட்டங்களில் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறுகிறதா? என கரூர் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த சரவணமுத்து (வயது 39) என்பவர் தனது தோட்டத்தில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story