குடிபோதையில் விஷம் குடித்தவர் சாவு
குடிபோதையில் விஷம் குடித்தவர் உயிரிழந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பாலமுருகன்(வயது 32). இவர் சம்பவத்தன்று தனது வயலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் தவறுதலாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story