நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமி கைது


நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமி கைது
x

நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் பாதாள அறையில் தடை செய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று குறிப்பிட்ட ஹூக்கா பாரில் அதிரடி சோதனை நடத்தி, உரிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஹூக்கா பாரை நடத்திய முஸ்தாக்அகமது (வயது 51) என்ற ஆசாமி கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே பல முறை கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹூக்கா பாரில், வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹூக்கா பாருக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


Next Story