புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது


புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2022 10:41 PM IST (Updated: 10 Aug 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் அருகே மணம்பூண்டி கிராமத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேகமாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 ஆயிரத்து 100 புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தொடர்பாக திருவண்ணாமலை - திண்டிவனம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 42)என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story