புகையிலை பாக்கெட்டுகளை விற்றவர் கைது


புகையிலை பாக்கெட்டுகளை விற்றவர் கைது
x

ஆலம்பாடி கிராமத்தில் புகையிலை பாக்கெட்டுகளை விற்றவர் கைது மளிகை கடைக்கு சீல்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் இணைந்து ஆலம்பாடி கிராமத்தில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலம்பாடி மெயின் ரோட்டில் பெருமாள் மகன் ரமேஷ் என்பவரின் மளிகை கடையில் 1,600 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ரமேசை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மளிகைகடையை பூட்டி சீல் வைத்தனர்.


Next Story