சாராயம் விற்க முயன்றவர் கைது
நாகூர் அருகே சாராயம் விற்க முயன்றவர் கைது செய்யப்படட்டார்
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் சாராய விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகூர் போலீசார் நேற்று முன்தினம் நாகூர்-கங்களாஞ்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொட்டாரங்குடியில் சந்தேகப்படும்படி வீட்டுவாசலில் அமர்ந்திருந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் மறைத்து வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது அதில் விற்பதற்காக சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சாராயம் விற்க முயன்ற நாகூரை அடுத்த கொட்டாரங்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த சங்கரை (வயது 40) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.