புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது


புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது
x

விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் குருசாமிபிள்ளை தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த திவாகர் (வயது 27) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திவாகரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2,320 மதிப்புள்ள 141 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.


Next Story