கார் மோதி சாலையோரம் நின்றவர் பலி
திருப்பத்தூர் அருகே கார் மோதி சாலையோரம் நின்றவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே மருத்துவகுடிப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 45), தங்கராஜ் (47). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் நெல்மேனிபட்டி தரைப்பாலம் அருகே சாலையோரம் நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
ேமலும் கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அவர்கள் இருவர் மீதும் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சூரியம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.