திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் சரவணப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், நகர பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை சரவணப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

1 More update

Next Story