உயிர்பலிக்காக காத்திருக்கும் பள்ளம்
பழனியில் உழவர்சந்தை சாலை சந்திப்பில் பெரிய பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திண்டுக்கல்
பழனியில், கோர்ட்டு அருகே உழவர்சந்தை சாலை சந்திப்பில் ரவுண்டானா உள்ளது. பழனியில் இருந்து திண்டுக்கல், மதுரை, தேனி செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன. இந்தநிலையில் ரவுண்டானா பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை சேதமடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டது. சேதமடைந்த சாலை ரவுண்டானா பகுதி என்பதால் அந்த வழியாக திரும்பும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். உயிர்பலிக்காக காத்திருக்கும் அந்த பள்ளத்தை மூடி சீரமைக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
Related Tags :
Next Story