புதுக்கோட்டையில் வீட்டு ஏசிக்குள் புகுந்த விஷ பாம்பு
ஏசியில் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள விஷ பாம்பை தீயணைப்புதுறையினர் போராடி லாவகமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே இலுப்பூர் பள்ளிவாசல் காடு பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன். இவரது வீட்டுக்குள் புகுந்த 6அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று ஏசிக்குள் புகுந்துள்ளது. இதனைப்பார்த்து அச்சமடைந்த முகுமது உசேன் இது குறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் அங்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு ஏசிக்குள் இருந்த 6-அடி நீளமுள்ள விஷ பாம்பை லாவகமாக பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story