நிர்வாண வீடியோ கால்...! பெண் தாதாவுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் போலீஸ் அதிகாரி...! பாய்ந்தது நடவடிக்கை


நிர்வாண வீடியோ கால்...! பெண் தாதாவுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் போலீஸ் அதிகாரி...! பாய்ந்தது நடவடிக்கை
x

குன்றத்தூரை சேர்ந்த இந்த யோகேஸ்வரிக்கு எஸ்தர் என்று இன்னொரு பெயரும் உண்டு. இவர், திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ஆவார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்தவர் சதீஷ்(30) சமூக அக்கறை உள்ள இளைஞர் சதீஷ்.

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் சதீஷ் சில சமூக விரோத செயல்கள் குறித்து போலீசாருக்கும் அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண் ரவுடி லோகேஸ்வரி குறித்து நிறைய புகார்களை போலீசாருக்கு கொண்டு கொண்டுசென்றுள்ளார்.

அந்த பகுதியில் விபச்சாரம் உள்ளிட்ட கள்ளச்சாராய வியாபாரத்தை நடத்தி வருபவர் லோகேஸ்வரி. 24 மணி நேரமும் லோகேஸ்வரியிடம் மதுபானங்கள் கிடைக்கும். கடையடைப்பு, டாஸ்மாக் விடுமுறை நாட்களில், 3 மடங்கு விலையை உயர்த்தி மது விற்பனை செய்வார்.

லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தினால், அந்த பகுதி இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகியும் வந்துள்ளது, சதீஷூக்கு கூடுதல் ஆத்திரத்தை தந்துள்ளது.. அதனாலேயே இவர் மீதான புகாரை போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்று கொண்டேயிருப்பார் சதீஷ்.

ஆனால்,செல்வாக்குள்ள தாதா லோகேஸ்வரி மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். ஒருகட்டத்தில் தங்கள்மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால்தான், கடைசியாக சதீஷ் தந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் லோகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. இதனால், தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கான பணம் லோகேஸ்வரிக்கு தடைபட்டுவிடவும், ஆவேசமடைந்த லோகேஸ்வரி, சதீஷை நயவஞ்சமாக பேசி தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்தார்.

மிகப்பெரிய அரிவாளை எடுத்து, சதீஷின் தலையை துண்டாக வெட்டிவிட்டு, அந்த தலையை வீட்டின் வாசலில் கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு, வீட்டையும் பூட்டி தலைமறைவானார். இதற்கு பிறகுதான் போலீசார் யோகேஸ்வரியை கைது செய்தனர்.

குன்றத்தூரை சேர்ந்த இந்த யோகேஸ்வரிக்கு எஸ்தர் என்று இன்னொரு பெயரும் உண்டு. இவர், திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ஆவார் என்பது கூடுதல் தகவலாகும். இப்போது யோகேஸ்வரி ஜாமீனில் உள்ளார். இவரது ஒரு ஆடியோ ஒன்று நேற்றைய தனம் இணையத்தில் வெளியானது.

சோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், உளவுப் பிரிவை சேர்ந்த எஸ்ஐ மாதவன் என்பவருடன் யோகேஸ்வரி காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் ஆடியோ ஒன்று வெளீயாகி உள்ளது. கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சச்சினை யாராலும் பிடிக்க முடியாது என்று மாதவன், கொலைக்குற்றவாளி எஸ்தரிடம் ஆடியோவில் பேசுவது இடம்பெற்றிருந்தது.

யோகேஸ்வரி மாதவனிடம் பேசும்போது, "என்னைக்காவது அந்த ரவுடி சச்சின் பிடிபட்டுதான் ஆவான். சின்னாபின்னமாயிடுவான். கண்ணன்கிட்ட மாட்டினான்னா முடிஞ்சு போச்சு அவன் சோலி. எப்படியாப்பட்டவங்களையும் பிடிப்பாரு அவர். என் உயிர் மாதிரி அவர். ஏன்னா இவன் சின்ன பையன். இவன் டீடெயில் அவருக்கு இன்னும் தெரியல என்கிறார் யோகேஸ்வரி.

அதற்கு மாதவன், "அப்படி சொல்லாதே.. இவனை பிடிக்கவே முடியாது.. உனக்கு தெரியாது..ப்பா.. யாருக்கும் அனுபவம் இல்லைன்னு நாம சொல்லிட முடியாது. சில பேருக்கு சில டேலண்ட்கள் இருக்கும். நித்தியானந்தாவை இப்போ வரைக்கும் யாராவது பிடிக்க முடிஞ்சுதா? இத்தனைக்கும் அவர் ஒரு சாதாரண சாமியார்தானே" என்கிறார் மாதவன்.. உடனே யோகேஸ்வரி, அடடே நித்தியானந்தாவுக்கு சர்டிபிகேட் நீ தர்றே.. சரி, அதைவிடு.. என்னை நீ எவ்ளோ என்னை லவ் பண்றே சொல்லு? எவ்ளோ லவ் பண்றே? என்னை உனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? இப்போ உன் நினைப்புல நான் வந்துட்டேனா.. சொல்லு வந்துட்டேன்னு சொல்லு என்று ரொமாண்ட்டிக்காக யோகேஸ்வரி பேசியிருந்தார்.

அதுமட்டுமல்ல, நீ என்னிடம் வீடியோ கால் பேசும்போதெல்லாம், நீ உடலில் டிரஸ்ஸில்லாமல் இருக்கிறாய் என்று சொல்வதும், அதற்கு நீ வீடியோ காலில் என்னோடு பேசு" என்று மாதவன் சொல்வதும் அந்த ஆடியோவில் இடம்பெற்றிருந்தது.இது மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பி விட்டது. இந்த ஆடியோதான் நேற்று முழுவதும் இணையத்தில் வெளியாகி அதிர வைத்தநிலையில், தாம்பரம் போலீஷ் அதிகாரிகளின் காதுகளுக்கும் இந்த விவகாரம் எட்டியது.. இப்போது உடனடியாக மாதவனை உளவுத்துறை பொறுப்பில் இருந்து நீக்கி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

கொலை,கொலை முயற்சி, வழிப்பறி என 6-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன்தான் ரவுடி சச்சின். போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும்கூட. அப்படிப்பட்ட குற்றவாளியை, "அனைத்து நுணுக்கங்களையும்" தெரிந்து கொண்டவன் என்று மாதவன் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக பேசியிருந்ததும், பல்வேறு கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பெண் தாதாவிடமே, கொஞ்சி குலாவியதும் பொதுமக்கள் மத்தியில் இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.


Next Story