போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கோவைப்புதூர் சாய்பாபா நகரை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 58). நெகமம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று நெகமம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கோவை-பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சாலைப்புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story