சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற பெண்ணை மதுபோதையில் விரட்டிய போலீஸ்காரர் கைது


சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற பெண்ணை மதுபோதையில் விரட்டிய போலீஸ்காரர் கைது
x

சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற பெண்ணை மதுபோதையில் விரட்டி சென்ற போலீஸ்காரர் கைது செய்யப்்பட்டார்.

சிவகங்கை

தேவகோட்டை,

சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற பெண்ணை மதுபோதையில் விரட்டி சென்ற போலீஸ்காரர் கைது செய்யப்்பட்டார்.

நிற்காமல் சென்ற பெண்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கோர்பசேவ் (வயது 32). இவர் தேவகோட்டை ஒத்தக்கடை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக கண்டியன்வயலை சேர்ந்த பூமிநாதனின் மனைவி பாண்டிசெல்வி(வயது 32) இருசக்கர வாகனத்தில் வந்தார்.

நிற்கும்படி அவரிடம் கோர்பசேவ் நிற்க சைகை காட்டியதாகவும், ஆனால் அவர் நிற்காமல் செல்லவே கோர்பசேவ் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது.

சருகணி விலக்கு சாலை அருகே மறித்து நிறுத்தினார். அப்போது பாண்டிசெல்வி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

போலீஸ்காரர் கைது

இதை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் போலீஸ்காரரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டவுன் போலீசாருக்கு தகவல் கூறினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் இது குறித்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் பாண்டிசெல்வி நேற்று தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ்காரர் கோர்பசேவ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோர்பசேவை கைது செய்து ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Related Tags :
Next Story