தலையில் கல்லை போட்டு பன்றி இறைச்சி வியாபாரி கொலை
முசிறியில் தலையில் கல்லை போட்டு பன்றி இறைச்சி வியாபாரியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முசிறியில் தலையில் கல்லை போட்டு பன்றி இறைச்சி வியாபாரியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை
முசிறியை அடுத்த கொக்கு வெட்டியான் கோவில் அருகே பனைமரத்தடியில் தலையில் பலத்த காயத்துடன் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த முள்ளுபாடி கிராமநிர்வாக அதிகாரி முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவரின் அருகே ரத்தக்கரையுடன் பெரிய கல் கிடந்தது. இதனால் அவரது தலையில் கல்லை போட்டு யாரோ கொலை செய்துள்ளனர்.
பன்றி இறைச்சி வியாபாரி
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் முசிறி மலையப்பபுரத்தை சேர்ந்த நாகராஜன் மகன் செல்வராஜ் (வயது 42) என்றும், அவர் அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக யாராவது, அவரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இக்கொலையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.