ராணிப்பேட்டை: ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரம்...! பதறி துடித்த பெற்றோர்
ராணிப்பேட்டை அருகே குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி குழந்தையை காப்பாற்றினர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் ஜோனா (வயது 30). தனியார் தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக சாப்பாடு வைக்க பயன்படும் பாத்திரம் குழந்தையின் தலையில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு லாவகமாக தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை காப்பாற்றினர்.
ஒன்றரை வயது குழந்தை விளையாடும்போது தலையில் பாத்திரம் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.