வயல்வெளி பகுதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் வயல்வெளி பகுதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம்.இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மின்சார வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.கடந்த 3 மாதத்திற்கு மேலாக சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம். அதற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.