மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது; வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 19 April 2023 2:23 AM IST (Updated: 19 April 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

வாடிபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

வாடிப்பட்டி,

சோழவந்தான் பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 21). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவரும் இவரது நண்பர் மதுரை சிக்கந்தர் சாவடி கிரீன் பார்க் அவென்யூவில் குடியிருந்து வரும் ராமசாமி மகன் மதிவாணன் (28) ஆகிய இருவரும் சோழவந்தானில் இருந்து சிக்கந்தர் சாவடி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

நகரி வழியாக மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு செல்ல அய்யங்கோட்டையில் சென்றபோது பின்புறம் வேகமாக வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் காயம் அடைந்த மதிவாணன் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story