வாகனம் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி


வாகனம் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி
x

வாகனம் மோதி தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

வேலையை ராஜினாமா செய்தார்

கேரளா மாநிலம், ஆலப்புழா அருகில் உள்ள பெருங்கிளிபுரம் கட்டிலயில் பகுதியை சேர்ந்த சங்கரன்குட்டியின் மகன் அனுரக் சங்கரன்குட்டி (வயது 30). இவர் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்த அவர், சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் இருந்து கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரை அடுத்த கொணலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அனுரக் சங்கரன்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுரக் சங்கரன்குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ேமலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story