மாணவர்களுடன் கால்வாயில் கவிழ்ந்த தனியார் பள்ளி பஸ் - குமரியில் பரபரப்பு


மாணவர்களுடன் கால்வாயில் கவிழ்ந்த தனியார் பள்ளி பஸ் - குமரியில் பரபரப்பு
x

குமரியில் தனியார் பள்ளி பஸ் கால்வாயில் கவிழ்ந்த விபத்துக்கு உள்ளானது.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே தனியார் பள்ளி பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தால் பஸ்சில் இருந்த மாணவர்கள் தங்களை காப்பாற்றக் கோரி அலறியுள்ளனர். இதனை கண்டு அந்தவழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த மாணவர்களை மீட்கும் முயற்ச்சியில் இறங்கினார்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பஸ்சில் சிக்கியிருந்த மாணவர்களை விரைந்து மீட்டதால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story