பாரதியார் வேடம் அணிந்து மாணவர்கள் ஊர்வலம்


பாரதியார் வேடம் அணிந்து மாணவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Dec 2022 7:30 PM GMT (Updated: 13 Dec 2022 7:31 PM GMT)

பாரதியார் வேடம் அணிந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

நாமக்கல்

குமாரபாளையம்:-

பாரதியார் பிறந்த தினத்தை யொட்டி குமாரபாளையத்தில் நாராயண நகர், மேற்கு காலனி, வீ.மேட்டூர்‌ சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மற்றும் வேமன்காட்டுவலசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பாரதியார் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை தொழில் அதிபர் ராஜாராம் தொடங்கி வைத்தார். போலீஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்த மாணவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஊர்வலத்தில் மகாகவி பாரதியார் பாடல்கள் பாடியபடி குமாரபாளையம் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சிக்கு வந்தனர். அங்கு ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பிரகாஷ், சூர்யா, கோபாலகிருஷ்ணன், பரமன் பாண்டியன், சித்ராபாபு, ரவி, சத்தியசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story