தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி


தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
x

ஆயக்காரன்புலத்தில் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வாய்மேடு:

முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கீழத்தஞ்சை தி.மு.க. மாவட்ட செயலாளருமான மா. மீனாட்சி சுந்தரம் பிறந்த நாளையொட்டி ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வேதாரண்யத்தில் உள்ள அவரது இல்லத்தில் மீனாட்சி சுந்தரத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஆயக்காரன்புலத்தில் வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அன்பரசு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் தென்னரசு, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் துரைராசு, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தொண்டரணி அமைப்பாளர் அருள், விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் டி.எஸ். பாலு ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்புராமன், ராமையன், தமிழ்ச்செல்விகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story