கொளக்குடி கிராமத்தில் அடர்வன குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்
கொளக்குடி கிராமத்தில் அடர்வன குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
புள்ளம்பாடி ஒன்றியம் கண்ணாக்குடி ஊராட்சி கொளக்குடி கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அடர்வன குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவை கலெக்டர் பிரதீப்குமார் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். விழாவுக்கு திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டஉதவி ஆணையர் வைத்திநாதன் தலைமை தாங்கினார்.லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், லால்குடி தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அதிகாரி வினோத் வரவேற்றார். நிகழ்ச்சியில் புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், ஊராட்சிமன்றதலைவர் சுகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுகமதிஜெகநாதன், ஒன்றிய பொறியாளர் விமல்ராஜா, பணி மேற்பார்வையாளர் அபிராமி, சாலை ஆய்வாளர் புஷ்பராஜ் மற்றும் கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜான்வில்லியம் நன்றி கூறினார்.