ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய மலைப்பாம்பு


ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய மலைப்பாம்பு
x

ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் மலைப்பாம்பு சிக்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று இளைஞர்கள் சிலர் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனுக்கு வீசிய வலையில் சுமார் 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மலைப்பாம்பை உயிருடன் வெளியே கொண்டு வந்த இளைஞர்கள் அதனை அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story