ஆட்டு கிடை வலையில் சிக்கிய மலைப்பாம்பு


ஆட்டு கிடை வலையில் சிக்கிய மலைப்பாம்பு
x

ஆட்டு கிடை வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

புதுக்கோட்டை

அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள வ.உ.சி. தெருவில் வசித்து வருபவர் ராமன். இவர் தன் வீட்டின் அருகே ஆட்டு கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கிடையில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை ஆட்டு கிடைக்கு வந்தபோது சுமார் 20 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஆட்டுக்கிடையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி போக முடியாமல் திணறிக்கொண்டு இருந்தது. இதைக் கண்ட அவர் உடனடியாக ஆடுகளை அங்கிருந்து மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு திருமயம் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அரிமளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story