குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது


குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
x

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் கள்ளம்பட்டி குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்து அச்சுறுத்துவதாக அப்பகுதியினர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சின்னக்கண்ணு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

1 More update

Next Story