குளத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது


குளத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
x

அஞ்சுகிராமம் அருகே குளத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி புதூரில் உள்ள நாராயணநேரி குளத்தில் சிலர் மீன்பிடிப்பதற்காக வலை வீசியிருந்தனர். அந்த வலையில் நேற்று ஒரு மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், அசோக் மற்றும் சிவகுமார் விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர். அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் இருந்தது. இதையடுத்து பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.


Next Story