நிலையூர் கால்வாய் கரையில் மலைபாம்பு சிக்கியது
நிலையூர் கால்வாய் கரையில் மலைபாம்பு சிக்கியது. சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக்கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
மதுரை
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி சார்ந்த நிலையூர் கால்வாயின் கரையின் வழியாக நேற்று மாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக் சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக்கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story