'தமிழியில்' நாலடியார் நூல் -சபாநாயகர் வெளியிட்டார்


தமிழியில் நாலடியார் நூல் -சபாநாயகர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 10 July 2023 12:30 AM IST (Updated: 10 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘தமிழியில்’ நாலடியார் நூலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.

திருநெல்வேலி

பணகுடி:

சேரன்மாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பொன் ரேகா. இவர் தமிழில் தொன்மை எழுத்துக்கள் மீது கொண்ட பற்று காரணமாக தமிழி மற்றும் வட்ட எழுத்துக்களைக் கொண்டு பயிற்சி பெற்று கொரோனா காலத்தில் தமிழியில் 1,330 திருக்குறள்களை எழுதி உலக சாதனையாக ஜக்கி புத்தகத்தில் உலக பதிவேட்டில் இடம் பிடித்தார். இவரது சாதனையாக கையடக்க திருக்குறள், மூவண்ணத்தில் முப்பால், திருவள்ளுவர் இல்லம், புதிய ஆத்திச்சூடியில் பாரதியார் உருவம், என தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அடுத்த முயற்சியாக திருக்குறளுக்கு இணையாக நாலடியாரை 'தமிழியில்' எழுதி அதன் நூலை சபாநாயகர் இல்லத்தில் அப்பாவுவை சந்தித்து வெளியிட்டு வாழ்த்து பெற்றார். ஆசிரியை பொன் ரேகாவின் திறமையை சபாநாயகர் அப்பாவு பாராட்டி கவுரவித்தார்.

1 More update

Next Story