சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை; அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
பிரம்மதேசம்,
மரக்காணம் அடுத்த முருக்கேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.
இதில் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணை தலைவர் பழனி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், மரக்காணம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சேரன், சிறுவாடி ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தில்லைபாபு உள்பட வட்டார மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.