காளை கன்றுகளுக்கு ஓட்டப்பந்தயம்


காளை கன்றுகளுக்கு ஓட்டப்பந்தயம்
x

கலசபாக்கம் அருகே காளை கன்றுகளுக்கு ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் சிறப்பு பரிசாக ஒரு பெட்டி பீர்பாட்டில் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் ஒன்றியம் கீழ்பாலூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு காளை கன்றுகளுக்கு இடையேயான 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் நடந்தது.

இதில் கலந்து கொள்ள சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கன்றுகளை இளைஞர்கள் வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர்.

வெற்றி பெறும் கன்றுகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் முதல் கடைசி பரிசாக ரூ.2 ஆயிரம் வரை வழங்கப்பட்டன.

மேலும் இதில் சிறப்பு பரிசாக ஒரு பெட்டி பீர்பாட்டில் வழங்கப்பட்டன. இதனை இளைஞர்கள் உற்சாகத்துடன் பெற்று சென்றனர்.

விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story