மனைவி இறந்த பின்பு குழந்தைகளை கவனிக்காத ரெயில்வே ஊழியர்
மனைவி இறந்த பின்பு குழந்தைகளை ரெயில்வே ஊழியர் கவனிக்வில்லை என்று மாமியார் புகார் அளித்துள்ளார்.
திருச்சி, ஜூன்.7-
திருச்சி செந்தண்ணீர்புரம் கோவலன் வீதியை சேர்ந்த குணசேகரன்-தாரா தம்பதியின் மகன் ராம்குமார். ரெயில்வேயில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜனனி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராம்குமாருக்கும், ஜனனிக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஜனனியின் பெற்றோர் 41 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜனனி, கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் ராம்குமார் குழந்தைகளை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஜனனியின் தாயார் தனது மகளுக்கு கொடுத்த தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் இதுபற்றி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ராம்குமார் மற்றும் அவருடைய பெற்றோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.