சுற்றித்திரிந்த வடமாநில வாலிபர்


சுற்றித்திரிந்த வடமாநில வாலிபர்
x

தாடிக்கொம்பு பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரை கிராம மக்கள் போலீசில் பிடித்து ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அருகே உள்ள மறவப்பட்டி பகுதியில் பகலில் சந்தேகப்படும்படி 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் வீடுகளில் முன்பு நிற்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு, அதனை திருட வந்தவர் என்று எண்ணினர். உடனே அவர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவருக்கு தமிழ் தெரியவில்லை. அவர் இந்தியில் பேசினார்.

இதையடுத்து அந்த வாலிபரை தாடிக்கொம்பு போலீசில் கிராம மக்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜலால் முகமது தலைமையிலான போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபர் கூறிய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அவரை பற்றி விவரங்களை சேகரித்தனர்.

அதில் அவருக்கு 19 வயது என்றும், அசாம் மாநிலம் நவுகாம் மாவட்டம் ரஜோரி என்ற ஊரை சேர்ந்தவர் என்றும், கேரளாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றபோது, மங்களூருவில் இருந்து வழி தவறி தாடிக்கொம்பு பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. பின்னர் கேரள மாநிலம், கொச்சியை அடுத்த காசர்கோட்டில் உள்ள அந்த வாலிபரின் உறவினருக்கு தகவல் தெரிவித்து, அவரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story