கொடைக்கானலில் பிறை நிலாவை வெள்ளி கோள் கடக்கும் அரிய நிகழ்வு


கொடைக்கானலில் பிறை நிலாவை வெள்ளி கோள் கடக்கும் அரிய நிகழ்வு
x
தினத்தந்தி 25 March 2023 2:15 AM IST (Updated: 25 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பிறை நிலாவை வெள்ளி கோள் கடக்கும் அரிய நிகழ்வு நடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் வானில் பிறை நிலாவை வெள்ளி கோள் கடக்கும் நிகழ்வு நேற்று இரவு சில நிமிடங்கள் மட்டும் அபூர்வமாக தென்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறுகையில், வானில் பிறை நிலாவின் பின்னணியில் வெள்ளி கோள் கடக்கும் நிகழ்வு நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. ஒரே நேர்கோட்டில் நிலா மற்றும் வெள்ளிக்கோள் பயணிப்பது போன்று மிக அருகில் காட்சியளிக்கும். 1 டிகிரிக்கு குறைவாக தொடங்கி நேரம் செல்ல செல்ல மிக தூரமாக காட்சியளிக்கும்.

வானில் நிலவும் பல்வேறு அதிசயங்களில் இது அரிய நிகழ்வாகும். வானில் மேகங்கள் இல்லாத போது வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்கலாம். இந்த நிகழ்வானது 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் வானில் தெரியும் என்றார்.

1 More update

Related Tags :
Next Story