செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான முகாம் நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் சேவை தொடர்பான முகாம் நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2-வது சனிக்கிழமையான கடந்த 14-ந்தேதி போகி பண்டிகை என்பதால், இந்த குறைதீர் முகாம் 3-வது சனிக்கிழமையான நாளை செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் நடைபெற உள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.
குறைதீர் முகாம் நடைபெறவுள்ள கிராமத்தின் பெயர்
செங்கல்பட்டு-கருநீலம்
செய்யூர்-அணைக்கட்டு
மதுராந்தகம்-ஒரத்தி
திருக்கழுக்குன்றம்-மணமை
திருப்போரூர்-ரெட்டிக்குப்பம் (பெருந்தண்டலம் ஊராட்சிக்குட்பட்டது)
வண்டலூர்- வெளிச்சை
மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.