மாட்டுத்தொழுவமாக மாறிய ரேஷன் கடை


மாட்டுத்தொழுவமாக மாறிய ரேஷன் கடை
x

ஆம்பூர் அருகே ரேஷந் கடை மாட்டுத்தொழுவமாக மாறி காட்சியளிக்கிறது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே சோமலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ரேஷன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது. அடிக்கடி சுவர் மற்றும் மேற்கூரை சிமெண்டு பூச்சு உதிர்ந்து கீழே விழுகிறது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது அவர்கள் மீது சிமெண்டு விழுந்து காயம் அடைகின்றனர். தற்போது இந்த ரேஷன் கடை வளாகம் மாட்டுத் தொழுவமாகவும் மாறி உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள கட்டிடத்தில் சென்று பொருட்கள் வாங்க அச்சமாக உள்ளது. ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. கடையை சுற்றியுள்ள புதர்களிலிருந்து பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த வளாகத்தை சுத்தம் செய்வதோடு, பழுதடைந்த கட்டிடத்தையும் புதுபிக்க வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு பழுதடைந்த கட்டிடத்தை சீரமைப்ப தோடு, ரேஷன் கடையை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.


Next Story