வீட்டுக்குள் நுழைய முயன்ற கட்டுவிரியன் பாம்பு
நன்னிலம் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முயன்ற கட்டுவிரியன் பாம்பு
திருவாரூர்
நன்னிலம்:
நன்னிலம் கீழ அக்ரகாரம் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவரது வீட்டு வாசலில் கிடந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கட்டு விரியன் பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவரை பார்த்ததும் அந்த பாம்பு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூங்கில் கட்டுக்குள் புகுந்தது. உடனே இதுகுறித்து நன்னிலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story