4,666 மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி


4,666 மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி
x

விருதுநகரில் 4,666 மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

காமராஜரின் பிறந்தநாளையொட்டி நகர் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் கே.வி.எஸ். பள்ளிகளில் பயிலும் 4,666 மாணவர்கள் காமராஜரை போல் வேட்டி, சட்டை அணிந்து அவரை பின்பற்றுவோம் என்ற உறுதிமொழி எடுக்கும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். இச்சாதனை நிகழ்ச்சி இந்திய சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்றனர். பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளானோர் காமராஜர் இல்லத்திற்கு வருகை தந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.


1 More update

Next Story